ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே இந்திய பிரதமரின் இலங்கை பயணம்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை இந்திய பிரதமரின் பயணம் இடம்பெறாது என இராஜதந்திர தரப்புக்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக அடுத்த இரண்டு மாதங்களில் பிரதமர் நரேந்திர (Narendra Modi) மோடி இலங்கை வருவார் என்றும் அதற்கான தயார் பணிகளுக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வருவார் என்றும் கூறப்பட்டது.
எனினும், தற்போதைய செய்திகளின்படி, பிரதமர் மோடி ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில், இலங்கையின் தேர்தல் அரசியல் சூழ்நிலை அதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேநேரம், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S.Jaishankar) பல கட்சிகளையும் சந்தித்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அந்த கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்து சென்றுள்ளார்.
அத்துடன், இந்திய முதலீட்டு திட்டங்கள் தொடர்பிலும் அவர் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |