கோட்டாபய அரசை இறுக்கிப் பிடிக்கும் மோடி! நடக்கப் போவது என்ன... (VIDEO)
கொழும்புடன் இந்தியா சுமூகமான உறவினை வைத்துள்ள நிலையில் ஈழத்தமிழர் விடயத்தில் புதுடில்லி அதிகளவு அழுத்தங்களை பிரயோகிக்க முடியாத நிர்ப்பந்தமும் உருவாகலாம் என அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில் குறிப்பாக இந்தியாவின் உதவியை நோக்கி தான் கொழும்பு பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட இதற்கான முற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் தான் இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்போதிருக்கிற சூழலில் உடனடி அயல்நாடும் பிராந்திய சக்தியுமான இந்தியாவின் உதவிகளை பெறுவதில் கணிசமான முன்னேற்றங்களை அடைந்திருப்பது போன்று தெரிகிறது.
அதன் கீழ் தான் தற்போதும் உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தியவின் உதவிகளை பெற்று இந்த விடயங்களில் இருந்து மீண்டு எழலாம் என்ற முயற்சியை கொழும்பு மேற்கொண்டு வருகிறது. அதில் கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளதாக தெரிகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri