அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள தொகுதியில் மோடி தரப்புக்கு பெரும் தோல்வி
இந்தியாவில்(India) உத்தரபிரதேஸில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் பாரதிய ஜனதாவுக்கு(BJP) பெரும் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் - அயோத்தியில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டதுடன் ராம பிரான் பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரியில் நடைபெற்றது.
வெளியான தேர்தல் முடிவுகள்
மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ராமர் கோயில் கனவு நிறைவேறியதால் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு பெருகியது.

இந்நிலையில், இந்த ஆதரவு மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, உத்தரபிரதேஸின் பாதிக்கும் மேலான தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்துள்ளது.

குறிப்பாக, அயோத்தியின் ராமர் கோயில் அடங்கிய பைசாபாத் தொகுதியில், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அவதேஸ் பிரசாத், பாரதிய ஜனதாவின் வேட்பாளர் லாலு சிங்கை விட சுமார் 47 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 43 நிமிடங்கள் முன்
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri