கடந்த நான்கு வருடங்களில் இந்தியாவின் மிக மோசமான நாள் இன்று
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி (BJP) எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இந்திய பங்குச்சந்தை கடந்த நான்கு வருடங்களில் மிக மோசமான சரிவை இன்று (04.06.2024) சந்தித்துள்ளது.
இதனால், இந்திய பங்குச்சந்தை 6 சதவீதத்தால் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்றையதினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிபெரும்பான்மை வெற்றியை எதிர்பார்த்து இந்தியாவின் பங்குச்சந்தை மேலோங்கியிருந்தது.
இந்தியக் கூட்டணி
அத்துடன், மோடியின் ஆட்சிக்காலத்தில் கடந்த 10 வருடங்களில் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமான வளர்ச்சியையும் காட்டியிருந்தது.
இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி 543 ஆசனங்களில் 400இற்கும் அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும், பல அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக் கணிப்புக்களையும் மீறி இந்தியக் கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்று பாரதிய ஜனதாக் கட்சிக்கு கடுமையான போட்டியை வழங்கியுள்ளது.
பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாரதிய ஜனதாக் கட்சி 243 இடங்களிலும் காங்கிரஸ் 98 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதனால், பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியமைப்பதற்கு கூட்டணிக் கடசிகளை நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |