இலங்கை இராணுவத்தை மிக நெருக்கமாக கண்காணித்த மோடியின் உளவுப்பிரிவு..!
இலங்கைக்கு 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு(Narendra Modi) நேற்றையதினம் கொழும்பில் அதியுச்ச வரவேற்பளிக்கப்பட்டது.
அதில் ஒரு பாகமாக இராணுவ துப்பாக்கி வேட்டுக்கள் அடங்கலான இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றிருந்தது.
அவர் அணிவகுப்பில் நடந்துகொண்டிருக்கும் போது அவருடன் இருந்த இந்திய விசேட அதிகாரிகள் அணிவகுப்பில் இருந்த ஒவ்வொரு இராணுவ அதிகாரிகளையும் நோட்டமிடுவதை காணக்கூடியதாக இருந்தது.
இது மட்டுமன்றி அவர் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும், நரேந்திர மோடியின் பாதுகாப்பு இந்தியாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்றே கூறலாம்.
அவரின் வாகனத்தை செலுத்தியவர்கள் கூட இந்தியாவில் தேர்ச்சி பெற்ற விசேட படைப்பிரிவினர் என்றும் கூறப்படுகின்றது.
ஒட்டுமொத்தமாக நரேந்திர மோடியின் பாதுகாப்பு கெடுபிடிகளில் இலங்கை அரசாங்கம் வெளியில் தான் இருந்தது எனலாம்.
இந்த விடயங்களை விரிவாக அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |