கடற்றொழிலாளர் பிரச்சினை குறித்து மோடி வலியுறுத்தியுள்ள விடயம்
இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கம் அண்மை காலத்தில் எடுத்த சில கடுமையான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் கடற்றொழிலாளர்களுக்கு ஒரு அன்றாடப் பிரச்சினை என்றும், அண்மைக் காலங்களில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று (05) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள்
இந்திய வெளியுறவுச் செயலாளரின் கூற்றுப்படி, கடற்றொழிளாளர் பிரச்சினை இரு தரப்பினருக்கும் இடையே கணிசமான அளவு விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது இரு தரப்பினருக்கும் இடையிலான உயர் மட்டங்கள் உட்பட அனைத்து மட்டங்களிலும் விவாதங்களின் நிலையான அம்சமாக இருந்து வருகிறது என்றும் மிஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக, இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத அடிமட்ட இழுவை கடற்றொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பதினொரு இந்திய கடற்றொழிலாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் இலங்கையின் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில், இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |