முதல் நாள் விஜயத்தில் அமெரிக்க புலனாய்வு தரப்பை சந்தித்த மோடி
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது முதல் நாள் விஜயத்தில் அந்நாட்டின் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்துள்ளார்.
உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாள் பிரான்ஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளார்.
இந்தியப் பிரதமர் இரண்டு நாட்கள் அமெரிக்காவில் தங்கி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா - அமெரிக்கா
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாக இருப்பதை உறுதி செய்வது குறித்து அங்கு துளசி கப்பார்ட்டுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஸ்டார்லிங்கின் தெற்காசிய சந்தையில் நுழைவது குறித்து அங்கு விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
