கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ளும் மோடி: பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) தியான நிகழ்ச்சியை முன்னிட்டு 2,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி 48 மணிநேரம் தங்குவதை முன்னிட்டே முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தியான நிகழ்வுகள்
இந்து துறவி சுவாமி விவேகானந்தரின் பெயரிடப்பட்ட நடுக்கடலின் நினைவுச்சின்னத்தில் மே 30 ஆம் இன்று முதல் ஜூன் 1 வரை பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபடுகிறார்.
இந்தநிலையில பிரதமரின் வருகைக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் மனு ஒன்றை அளித்துள்ளது. எனினும் பிரதமரின் தியான நிகழ்வுகள் தடையின்றி தொடர்வதோடு, இந்த தியான நிகழ்வு காரணமாக கடற்கரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதமரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வியாழன் முதல் சனிக்கிழமை வரை தனியார் படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பயணத் திட்டம்
2019 ஆண்டிலும் தேர்தல் பிரசாரத்திற்குப் பின்னர் நரேந்திர மோடி, கேதார்நாத் குகையில் தியான நிகழ்வை நடத்தினார். இதேவேளை மோடியின் தியானம் சுவாமி விவேகானந்தர் தெய்வீக தரிசனம் பெற்றதாக நம்பப்படும் புனித தலமான தியான் மண்டபத்தில் நடைபெறுகிறது.
அத்துடன் அவரின் பயணத் திட்டத்தில் சிறிபகவதி அம்மன் கோவிலில் பிரார்த்தனை மற்றும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்வையிடுவது ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
you may like this