அதானி நிறுவனத்துக்கு மோடி வழங்கிய பில்லியன் தொகை! அம்பலப்படுத்திய அமெரிக்க ஊடகம்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டொலர் (.33,000 கோடி இந்திய மதிப்பு) முறைகேடாக நிதி வழங்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதுதொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்றை அமெரிக்காவின் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
2023 இல், ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீது பங்குகளைக் தவறாக கையாண்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை அண்மையில் இந்திய மத்திய அரசின் பங்கு பரிவர்த்தனை வாரியம் நிராகரித்துள்ளது.
பண மோசடி
மேலும் அதானியும் அவரது சகாக்களும் பல பில்லியன் டொலர் லஞ்சம் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வழக்கு நடந்து வருகிறது.
இதில், எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,000 கோடி சட்டவிரோதப் பணம் கொடுத்த குற்றச்சாட்டும் அடங்குகிறது.

இந்த சூழலில் இருந்து அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து இரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக குறித்த ஊடகம் கூறியுள்ளது.
இந்த முதலீட்டு வியூகம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றது என்பதற்கான ஆவணங்களை மேற்கண்ட ஊடகம் விளக்கியுள்ளது.
அதிகப்படியான முதலீடு
நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக ஒரே நிறுவனத்தில் அதிக முதலீடு செய்வது அதிக ஆபத்தானது மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு காப்பீடு அளிக்கும் பொதுத்துறை நிறுவனதில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மத்திய அரசு பயன்படுத்தி உள்ளது என்பதே இந்த குற்றச்சாட்டின் சாராம்சமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதானி குழுமம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் மத்திய அரசு முடிவுகளில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அரசியல் சலுகை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதானி நிறுவனத்தில் LIC-யின் அதிகப்படியான முதலீடு குறித்து சந்தேகம் எழுப்பி வந்த நிலையில் விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |