கச்சத்தீவு தொடர்பில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள மோடி! செய்திகளின் தொகுப்பு
கச்சத்தீவை 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திரா காந்தி அரசு தான் வழங்கியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேற்று (10.08.2023) பதிலளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கச்சத்தீவானது இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்துள்ள ஒரு தீவாகும். பாரம்பரியமாக இலங்கை மற்றும் இந்திய கடற்தொழிலாளர்களால் இந்த தீவு பயன்படுத்தப்பட்டு வருவதும் வழக்கம்.
1974 இல் மேற்கொள்ளப்பட்ட “இந்தோ - இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்” கீழ் கச்சத்தீவை இலங்கை பிரதேசமாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார்.
கச்சத்தீவை இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி தமிழக தி.மு.க அரசு தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாக கூறிய இந்திய பிரதமர் அதனை சாத்தியப்பாடற்றதாக மாற்றியது காங்கிரஸ் அரசு தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
