அமெரிக்க தடுப்பூசியை 12 - 17 வயதானவர்களுக்கு செலுத்த ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் ஒப்புதல்
கோவிட் தொற்றுக்கு எதிரான அமெரிக்க மொடர்னா தடுப்பூசியை 12 வயது முதல் 17 வயதானவர்களுக்கு செலுத்துவதற்கு, ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகின்றன.
எனினும் பைசர் தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் செலுத்தப்படுகிறது.
பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைவானவர்களிடம் பரிசோதனையில் உள்ளது.
இந்தநிலையில், அமெரிக்காவின் மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகள் 3,700இற்கும் மேற்பட்ட சிறாருக்கு (12 - 17 வயது பிரிவினர்) செலுத்தி பரிசோதிக்கப்பட்டன.
இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் பிறப்பொருள் எதிரிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறாரிடமும் இந்த தடுப்பூசி, பிறப்பொருள் எதிரிகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மொடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாருக்கு செலுத்தலாம் என அமெரிக்க மருந்துகள் நிறுவனம் பரிந்துரை வழங்கி இருந்தது.
இதனையடுத்தே, ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் மொடர்னாவை சிறுவர்களுக்கு வழங்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது.