கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு தேவையான நவீன தொழில் நுட்பங்களையும் அனுபவங்களையும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் சார்பான வேலைகள்
வடக்கு கிழக்கு தனியார் கல்லூரிகளின் ஒன்றியம் என்ற அமைப்பின் பிரதிநிகள் இன்று(22.02.2023) கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹீரூப் இன்று
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, திருகோணமலை மாவட்டத்தின் கடற்றொழில்
சார்பான வேலைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




