கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான நடமாடும் சேவை
ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான நடமாடும் சேவை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடமாடும் சேவை, இன்று (27.02.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 04.01.2024 அன்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பிரதேசங்களிலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பங்குபற்றிய அமைச்சுகள்
இதனையடுத்தே, காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான திணைக்களங்களுக்கான நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நடமாடும் சேவையில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு,
பாதுகாப்பு அமைச்சு, காணி ஆணையாளர், நீர்ப்பாசனம் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் பங்குபற்றியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
