கிண்ணியா பூவரசந்தீவில் நடமாடும் சேவை
வெள்ள அனர்த்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவு கிராமத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நடமாடும் சேவை ஒன்று நடைபெற்றது.
கிண்ணியா பிரதேச மக்களுக்குச் சேவை செய்வதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ள கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையினால் இந்த நிவாரண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்களுக்கு உடனடி தீர்வு
இந்த நடமாடும் சேவையின் ஊடாக, வெள்ள அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நான்கு முக்கிய சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இலவச மருத்துவ சேவை, பொதுச் சுகாதார சேவை, மின்சார சேவை, குடிநீர் சேவை ஆகியன வெள்ளத்தால் சுகாதார ரீதியாகவும், உட்கட்டமைப்பு ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தீர்வை வழங்கும் நோக்கில், இந்த சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.

இந்தச் சேவைகளை வழங்குவதற்காக, பல துறைசார் நிறுவனங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்து பங்களிப்பு வழங்கினர்.
கிண்ணியா பிரதேச வைத்தியர்கள், குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய ஊழியர்கள், இலங்கை மின்சார சபை ஊழியர்கள், மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் ஆகியோர் தங்கள் அரிய சேவையினை மனமுவந்து வழங்கினர்.





அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam