நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு விரைந்த கும்பல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவின் பண்டாரகமவில் உள்ள வீட்டிற்கு நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவின் பண்டாரகமவில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பலர் வருகை தருவதாக தகவல் வெளியானதையடுத்து கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் தாமாக முன்வந்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் பொல்லுகளுடன் வருகை தந்த குழுவினர் இதனை தொடர்ந்து அங்கிருந்து சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.
லலித் எல்லாவல பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri