ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: எம்.கே சிவாஜிலிங்கம் அறிவிப்பு
இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய தவறினால் ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் கைதி விடுதலை
தமிழ்த்தரப்புடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளுக்கமைவாக ஜனாதிபதி இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
அவ்வாறு விடுதலை செய்யத் தவறின் ஜனாதிபதிக்கு எதிராக அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம்.
ஜனநாயக போராட்டங்கள்
வேலன் சுவாமியை கைது செய்தமையை கண்டிப்பதோடு இவ்வாறெல்லாம் ஜனநாயக போராட்டங்களை அடக்க முடியாது.
அத்துடன் எங்களை எந்த சட்டத்தின் கீழும் கைது செய்யலாம், அதற்காக நாங்கள் அஞ்சப் போவதில்லை.
எத்தகைய தடைகள் வந்தாலும், நாங்கள் அவற்றை தகர்த்து,எமது மக்களுக்காக எங்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டத்தை தொடர்ச்சியாக நாங்கள் நடத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
