நாட்டு மக்களுக்கு பொலிஸ் அவசர பிரிவு விடுத்த எச்சரிக்கை!
இலங்கை பொலிஸ் அவசர சேவை தொலைபேசி எண்ணான 119 எனும் எண்ணை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
குறித்த அவசர இலக்கமானது 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும், நாளாந்தம் 3,000 முதல் 3,500 அழைப்புகள் வரை இதற்கு அழைப்பு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவுகளை ஆய்வு செய்த போது, சில நபர்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர தொலைபேசி எண்
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் அவசர சேவை, அதிகாரிகள் அவசர சேவை மற்றும் அத்தியாவசியமான சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்களுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய அவசர மற்றும் அத்தியாவசியமான சம்பவங்கள் குறித்து முறைப்பாடு தெரிவிப்பதற்கு மாத்திரம் அவசர தொலைபேசி எண்ணை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
