காணாமல்போன இளைஞன் பல நாட்களின் பின் சடலமாக மீட்பு!
காணாமல்போன இளைஞர் ஒருவர், 11 நாட்களின் பின்னர் சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை, பெலியத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து நேற்று(30) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்பு
கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மேற்படி இளைஞர், வீடு திரும்பவில்லை என்று பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்னந்தோப்பு உரிமையாளர் சடலத்தைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
மேலதிக விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் மோட்டார் சைக்கிள் நாகுலுகமுவ தொடருந்து நிலையத்துக்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        