விறகு வெட்ட காட்டிற்கு சென்ற யுவதிக்கு ஏற்பட்ட நிலை! நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியாவில் உள்ள டன்சினன் பகுதியில் விறகு வெட்ட காட்டிற்கு சென்ற 25 வயதான இளம் யுவதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9.30 மணியளவில் விறகு வெட்ட சென்றதாக காணாமல் போன யுவதியில் தாயார் தெரிவித்துள்ளார். காணாமல் போன தனது மகள் பல நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக, முன்னர் சில் சந்தர்ப்பங்களில் குறித்த யுவுதி காணாமல் போனதாகவும் நுவரெலியா பொலிஸாரிடம் தாய் தெரிவித்திருந்தார்.
இன்று பிற்பகல் வரையில் யுவதி வீடு திரும்பாத நிலையில், அருகில் உள்ளவர்களுக்கு தாயார் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து காட்டு பகுதியில் இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்க்கப்படுகின்றது.
எனினும், யுவதி குறித்த தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam