லண்டனில் இருந்து வந்த தமிழ் பெண் சடலமாக மீட்பு! - விசாரணைகள் தீவிரம் (Video)

Investigation Police Kilinochchi United Kingdom
By Murali Dec 28, 2021 06:56 AM GMT
Report

கிளிநொச்சியில் காணாமல் போன பெண், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


லண்டனில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் பெண் மாயம்! - விசாரணைகள் தீவிரம்

பிரித்தானியாவில் சில காலம் வாழ்ந்துவிட்டு இலங்கை திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக் கறைகள் காணப்பட்டதையடுத்து, அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

67 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான இவர், பிரித்தானியாவில் சில காலமாக வசித்து வந்ததுடன், மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து தமது சொத்துக்களைக் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (27) இரவு 7.20 மணியளவில் குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் அறிந்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்...

லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவர் 3 வருடமளவில் இலங்கை திரும்பியுள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.

தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றயை தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பி.பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் நேற்று மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரியைமாளரால் நேற்று மாலை 6.00 மணியவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். குறித்த வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது. குறித்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை அழைத்து சென்று பொலிசார் அடையாளம் காட்டியுள்ளனர். குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிழந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக தகவல் - யது

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US