முன்னேஸ்வர ஆலயத்தில் காணாமற்போன அம்மன் சிலை - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சிலாபம் முன்னேஸ்வரத்தில் அமைந்துள்ள காளி அம்மன் ஆலய காளி சிலையொன்றை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தில் காணப்பட்ட சிலையை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயத்தின் பொறுப்பாளர் எனக் கூறிக் கொள்ளும் பெண் ஒருவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
ஆலயத்தில் இருந்த சிலையை காணவில்லை எனவும் ,எவரேனும் இந்த சிலையை களவாடிச் சென்றிருக்க வேண்டுமென சந்தேகிப்பதாகவும் அந்த பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ஐம்பொன் சிலையொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam