காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு
நிகவெரட்டிய பொலிஸ் பிரிவில் காணாமல்போன 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் நேற்றுமுன் தினம் (02 .08.2023) வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குருநாகல் பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் தங்கியிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
கடந்த 31 ஆம் திகதி தந்தையுடன் பாடசாலைக்கு சென்ற சிறுமி, அன்று காலை காணாமல்போனதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணையை முன்னெடுத்திருந்த பொலிஸார் சிறுமியின் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாடசாலை சீருடை என்பனவற்றினை குருநாகல் பேருந்து தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து மீட்டிருந்தனர்.
இதற்கமைய, தொடர்ந்தும் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து சிறுமியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |