காணாமல் போனவர்களின் உறவினர்களை காணாமல் போனோர் அலுவலகம் அச்சுறுத்துகிறது

Investigation Letter Human rights Journalist
By Independent Writer Sep 06, 2021 02:29 PM GMT
Report

காணாமல் போனவர்களைத் தேடும் இலங்கையின் முதன்மையான அமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கோருவதால் அச்சமடைந்துள்ளனர்.

சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட விடயங்களை அலுவலகம் கோரியுள்ளதால் தாம் அச்சமடைந்ததாகச் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும், காணாமல் போன தனது கணவருக்காக சுமார் 12 வருடங்களாகப் போராடி வருபவருமான சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

"காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து மேலதிக விபரங்களைப் பெறுதல்" என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி, காணாமல் போனோர் அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ பிரதானியான ஏ.என் நுவன் அனுப்பி வைத்த கடிதம் தனக்கு அதிர்ச்சியளித்ததாகச் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

"ஏனென்றால், பல வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அல்லது விசாரணைகள் பற்றிய எந்த புதுப்பிப்பும் இல்லாத நிலையில், அமைப்புக்குத் தொடர்பில்லாத தனிப்பட்ட ஆவணங்களுக்கான உங்கள் வேண்டுகோள், நீதிக்குப் பதிலாக வன்முறை மற்றும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபரான நான் உணர்கின்றேன்.” என அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2010 ஜனவரி 24ஆம் திகதி கடத்தப்பட்டுக் காணாமல் போன தனது கணவரும், ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொடவை கண்டறிய மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்துக் காணாமல் போனோர் அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ பிரதானிக்கு மிக நீண்ட விளக்கமளித்துள்ள சந்தியா எக்னலிகொட, தம்முடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடிதத்தில் அவரது சந்தேகங்களுக்கான நியாயமான காரணங்களையும் அவர் உள்ளடக்கியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கும் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பிரகீத் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரணைகளில் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

"இந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்ட எனக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் அல்லது அழைப்பும் விடுக்காமல், நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல், வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தி ஒருதலைபட்சமாகச் செயற்படுகின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளை விடுவித்த ஆணைக்குழு, முறையான விசாரணையை நடத்தியதாகவும், பிரகீத் காணாமல் போனமை குறித்த உண்மையை வெளிக்கொண்டு வந்த அதிகாரிகளைப் பாராட்டுவதற்குப் பதிலாகத் தண்டித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சந்தியா எக்னெலிகொட, இந்த தீர்மானமானது, இலங்கை குடிமகளாக அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ”சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நியாயமாக இருக்க வேண்டு" என்ற தனது அடிப்படை அரசியலமைப்பு உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மீறல்களுக்குத் தலைமை வகித்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தற்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவராகச் செயற்படுவதாகவும், இந்த அலுவலகத்தை ஒரு பக்கச்சார்பற்ற, சுயாதீனமான அமைப்பாக நம்பலாமா எனவும், அது பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான உளவியல் மற்றும் சமூக ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா? எனவும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தில் தரவு பிரதானியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

2016ஆம் ஆண்டு நிலைமாறு கால நீதி பொறிமுறையின் முதல் படியாக நிறுவப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்ட ஆணையாளரின் நியமனமும், தற்போதைய அதிகாரிகள் நியமனம் மற்றும் அமைப்பு முற்றிலும் வேறுபட்டுள்ளதோடு, அலுவலகத்தில் சுயாதீனத்தன்மை குறித்த நம்பகத்தன்மை சிதைந்துள்ளது.” சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நிறுவனம் காணாமல்போனோர் குறித்த அலுவலகம் என்பதை நினைவு கூர்ந்த சந்தியா எக்னெலிகொட, ICRC மற்றும் UNWGEID ஆகிய நிறுவனங்களுடன் நேரடியாகக் கையாளாமல் கடிதங்களைக் கோருவது மறைமுக அழுத்தமாகவே பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல்போனமை குறித்த மேலதிக தகவல்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின் வழக்கு விசாரணைகளை அவதானிக்குமாறு சந்தியா எக்னெலிகொட காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் அலுவலகம் காணாமல் போன, காணாமல் போன குடும்பங்கள் அனுபவிக்கும் வலி மற்றும் அதிர்ச்சியை ஏற்றுக்கொள்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் / காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குப் பொறுப்புக்களை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்,” என அவர் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்த விடயம் கடிதத்தின் நிறைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US