தெஹிவளையில் காணாமல் போன பெண் தொடர்பில் குடும்பத்தார் வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
கொழும்பு - தெஹிவளையில் காணமல்போனதாக அறிவிக்கப்பட்ட வயோதிப பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த வயோதிப பெண் நேற்றையதினம் தெஹிவளையில் ஆடையகத்திலிருந்து சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வயோதிபபெண் ஒருவரை பொதுமகன் ஒருவர் அடையாளம் கண்டு வீட்டிற்கு அழைத்துவந்து சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பிரசுரிக்கப்பட்ட நேரம் - 10:44
கொழும்பு - தெஹிவளையில் வயோதிப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குமாரவேல் நகுலேஸ்வரி என்ற வயோதிப பெண் காணமல்போயுள்ளதாகவும் இவரை கண்டுபிடிக்க உதவுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர் நேற்றையதினம் (12.04.2024) தெஹிவளையில் உள்ள ஒரு ஆடையகத்திலிருந்து பிற்பகல் 12.15 மணியளவில் வெளியே வந்ந நிலையில் காணமல்போயுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த வயோதிப பெண்ணை அடையாளம் கண்டால் 0777444031 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு உடன் அழைக்குமாறும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.






தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
