மகாஓய - நுவரகலதென்ன வனப்பகுதியில் காணாமல்போன நபரின் சடலமாக மீட்பு!
அம்பாறை - மகாஓய, நுவரகலதென்ன வனப்பகுதியில் சுற்றுலா சென்றிருந்த போது காணாமல் போன நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகாஓயா நீர் வழங்கல் சபையின் முகாமைத்துவ உதவியாளரான 34 வயதுடைய உஹன குமரிகம என்பவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி சுற்றுலா சென்றுள்ள 8 பேர் கொண்ட குழுவினரின் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டின் அடிப்படையில் மஹாஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்தக் குழுவினர் 3ஆம் திகதி நண்பகல் நுவரகலதென்ன வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இரவு உல்லாசமாக இருந்துவிட்டு காலையில் வனப்பகுதியில் உறங்கச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மறுநாள் குழுவினரின் ஒருவர் அங்கு இல்லாததால் 118 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுன்னகர்.
இந்த நிலையில், 34 வயதுடைய உஹன குமரிகம என்பவரின் சடலம் அருகிலுள்ள பாறையின் கீழ்ப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
