1,738 நாட்கள் தொடர் போராட்டம்: 108 உறவுகள் இதுவரை உயிரிழப்பு
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகளில் இதுவரை 108 பேர் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி 1,738 நாட்களாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதுவரை எந்த தீர்வும் கிடைக்காது, தமது உறவுகளை தேடியலைந்த 108 பேர் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வவுனியா மாவட்டத்தில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும், ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 16 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri