டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து யுவதி மாயம்!தேடும் பணிகள் தீவிரம்
திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர் வீழ்ச்சியின் உச்சிக்கு கால் கழுவ சென்ற யுவதி ஒருவரே இவ்வாறு கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலவாக்கலை, லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
97 மீட்டர் பள்ளத்திலேயே குறித்த யுவதி விழுந்துள்ளதாகவும், யுவதியை தேடி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
ஏனைய 3 யுவதிகளும் திம்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை திம்புளை – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam