லண்டனில் 19 நாட்களாக காணாமல்போயுள்ள சிறுமி! புகைப்படத்துடன் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
லண்டனில் கடந்த 19 நாட்களாக சிறுமியொருவர் காணாமல்போயுள்ள நிலையில்,சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனை சேர்ந்தவர் Nahid Stitou (16) வயது எனும் சிறுமி கடந்த மாதம் 27ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல்போயுள்ள நிலையில், இதுவரை சிறுமி குறித்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், 19 நாட்களாக காணாமல்போயுள்ள சிறுமியின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சமூகவலைதள பதிவில் தயவு செய்து Nahid-ஐ கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுங்கள் என பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,சிறுமியை அடையாளம் காண்பதற்காகவே அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam