யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்ற இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தங்கராசா அமல்ராஜ் (வயது 44), செல்வராசா ராஜ்குமார் (வயது 30) என்ற இரண்டு கடற்றொழிலாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கடற்றொழிலாளர்களது உறவுகள் கருத்து தெரிவிக்கையில், அவர்கள் கடலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள்.
கடற்படையினர் நடவடிக்கை
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கரையை வந்தடைந்திருக்க வேண்டும். இருப்பினும் இன்றுவரை திரும்பி வரவில்லை. அவர்கள் இருவரையும் நேற்றையதினம் (03) இந்திய கடற்றொழிலாளர்கள் கடலில் கண்டதாகவும், அவர்களுக்கு சாப்பாடு கொடுத்தாகவும் கூறினர்.

இந்திய எல்லையில் நின்றால் இந்திய கடற்படையினர் கைது செய்து விடுவார்கள் என்றும், ஆகையால் கரையோரமாக செல்வதாகவும் அவர்கள் தங்களுக்கு கூறிவிட்டு சென்றதாக இந்திய கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாங்கள் கடற்படையினர், பொலிஸார் என அனைவருக்கும் தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை.
தேடுதல் நடவடிக்கை
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரை உலங்குவானூர்தி மூலம் மீட்டனர். அதுபோல இவர்களையும் ஏன் காப்பாற்ற கூடாது? இதுவரை கடற்படை எந்தவொரு தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

இதுவரை 3500 லீட்டர்கள் எரிபொருளை பயன்படுத்தி நாங்களே தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டோம். எல்லை தாண்டி சென்று தேடவும் முடியாது.
நாங்கள் தேடி சென்றவேளை இந்திய கடற்படையினர் எங்களை விரட்டினர். எனவே அவர்களை உயிருடன் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam