இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை : விசேட அதிரடிப்படை மீது குற்றம் சுமத்தும் தாய்
இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவில் தனது மகன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனவரின் தாய் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தந்தையின் தலைவிதியை வெளிக்கொண்டுவராமல் அலட்சியப்படுத்தியதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பொலிஸார், கைதிகளின் உரிமைகள் தொடர்பிலான செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
“கடந்த 27ஆம் திகதி மாலை எனது மகனை இவ்வாறு அழைத்துச் சென்றது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்தான் என்பதில் உறுதியாக உள்ளேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால், கடந்த 27ஆம் திகதி எங்கள் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல், என் மகன் தங்களிடம் இருப்பதாக என்னிடம் இரண்டு முறை கூறியுள்ளனர்.”
கொழும்பில் ஏப்ரல் 9ஆம் திகதி கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கும் குழு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற காணாமல் போன கோனபீனுவில் கபில குமார சில்வாவின் தாயார் குமுதுனி ஜயசேகர தாயார் கண்ணீர் மல்க இவ்வாறு தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி இரவு உணவிற்காக பாண் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக, கபில குமார கடைக்கு சென்றபோது காணாமல்போனதாக, கடந்த வாரம் வெளிப்படுத்திய கைதிகளின் உரிமைகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா, காணாமல் போன கபில குமாரவின் வாழ்க்கை குறித்து அச்சம் வெளியிட்டிருந்தார்.
“அடுத்த நாள், ஆயுதங்கள் ஏதும் இருக்கிறதா என அந்த இளைஞனின் வீட்டில் STF சோதனை நடத்துகிறது” தானும் தனது கணவரும் வசிக்கும் அக்குறணை, கஹவ, பொத்தாவல வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத குழுவினர், தனது மகன் தம்முடன் இருப்பதாக இருமுறை கூறியதாக வலியுறுத்திய தாய் குமுதுனி ஜயசேகர, தற்போது எவ்வாறு தமது மகன் அவர்களின் பொறுப்பில் இல்லை என கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
காணாமற்போன கபில குமாரவின் மனைவி ஹொரவ்பொத்தானை பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போது, பொலிஸார் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை.
பொலிஸ் நிலையத்தில் அனுபவித்த துன்புறுத்தல்கள்
அதனையடுத்து, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கெபித்திகொல்லாவை நீதவான், விசாரணைக்காக அவரது வாக்குமூலத்தைப் பெறுமாறு ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கபில குமாரின் மனைவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களாக அடையாளம்தெரியாத குழுவினர் தமது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வீட்டுக்கு வருகைத்தந்தபோதிலும், கைதிகயின் உரிமைகளை பாதுகாக்கும் குழு அவர்களுக்கு உதவத் தொடங்கிய பின்னர், ஏப்ரல் 7ஆம் திகதி அடையாள அட்டையைக் காட்டி அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்ததாக தாய் குமுதுனி ஜயசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவரது முறைப்பாட்டிற்குப் பின்னர், குழுவினர் தாங்கள் சிக்கலில் இருப்பதாகவும், பிடிகல பொலிஸுக்கு வருமாறு கூறியுள்ளனர்.
அந்த கோரிக்கையை நிராகரித்த பின்னர், பிடிகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வந்து அவரை அழைத்துச் சென்று தொடர் கேள்விகளை எழுப்பிய போதிலும் மகனின் கதி என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |