மஸ்கெலியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது நேற்றிரவு (26.02.2024) மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 40 வயது மதிக்கத்தக்க இரு பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் காணாமல்போயுள்ளார் என அவரின் மனைவியால் ஐந்து நாட்களுக்கு முன்னர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
