காணாமல் போயுள்ள மாற்றுத்திறனாளி பெண்! உதவி கோரும் பெற்றோர்
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீராவோடை-04 ஹாஜியார் வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்னை கடந்த 10 நாட்களாக காணவில்லை என்று குடும்பத்தினர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு சென்ற பெண்
மாற்றுத்திறனாளியான ஏ.ஐ. பாத்திமா சம்ஹா என்ற பெண் 23 வயதுடையவர் என்றும் அவர் கடந்த 10.09.2022 அன்று வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு சென்று வருவதாக சென்ற நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உதவி கோரும் பெற்றோர்
இவர் காணாமல் போனது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இவரை கண்டவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கமான 065 - 2257709 என்ற இலக்கத்திற்கு அல்லது அவரது குடும்பத்தாரின் இலக்கமான 077 - 3727293 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துமாறு குடும்பத்தார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.