அடையாளம் தெரியாத இலக்கம் ஊடாக கிடைத்த அழைப்பு - காணாமல் போன மகள்
தனது மகள் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் களுத்துறை பயாகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
10 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மக்கோன பிரதேசத்தில வசித்து வரும் இந்த தாய் அதிகாலையில் கடைக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, மகள் வீட்டில் இருக்கவில்லை.
இணையத்தளம் வழியாக கல்வி கற்பதற்கான தான் மகளுக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்து கொடுத்ததாக தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பாடசாலை மாணவியின் தொலைபேசிக்கு அடையாளம் காணப்படாத தொலைபேசி இலக்கம் ஒன்றில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்துள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட இலக்கம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனால், மாணவியின் தொலைபேசிக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கம் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri