சிறுவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்! - பொலிஸார் அவசர கோரிக்கை (VIDEO)
வத்தேமுல்ல, கொடதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் காணாமல் போன சிறுவர்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர்கள் 10 மற்றும் 12 வயதுடையவர்கள் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
10 வயதான திசாநாயக்க முதியன்சேலாகே கவீஷா சண்டகெலும் மற்றும் 10 வயதான ஜெயசேகர முதலியின் அகிலா டெடுனு ஆகிய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுவர்கள் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டதெனியாவ OIC - 071 859 1634 - கொடதெனியாவ பொலிஸ் நிலையம் - 033 224 0050/033 227 2222


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
