அமெரிக்காவில் பல மாதங்களாக மாயமான சிறுமி: தாய் மீது வலுக்கும் சந்தேகம்
அமெரிக்காவின் உட்டா (Utah) மாநிலத்தில் பல மாதங்களாக மாயமாகியிருந்த 9 வயது சிறுமியான மெலோடி பஸார்ட் (Melodee Buzzard), துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தகொலைச் சம்பவம் தொடர்பாக அச்சிறுமியின் தாயான 40 வயதுடைய ஆஷ்லீ பஸார்ட் (Ashlee Buzzard) என்பவரை கவுண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் குறித்த சிறுமி பாடசாலைக்கு வரவில்லை என ஒக்டோபர் 14 ஆம் திகதி பாடசாலை நிர்வாகம் முறைப்பாடு அளித்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையில் வெளியான மர்மங்கள்
இது குறித்த விசாரணையின் போது, தனது மகள் எங்கே இருக்கிறார் என்பது குறித்து முறையான தகவல்களை வழங்காமல் தாயார் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி கொலராடோ-உட்டா எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு கெமரா ஒன்றில் மெலோடியும் அவரது தாயும் கடைசியாகக் காணப்பட்டனர்.
அதற்குச் சில நாட்களின் பின்னரே சிறுமி கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
இம்மாத தொடக்கத்தில் உட்டா மாநிலத்தில் கிராமப்புற பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு தம்பதியினர், அழுகிய நிலையில் இருந்த சிறுமியின் உடலைக் கண்டெடுத்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் 22 அன்று மேற்கொள்ளப்பட்ட மரபணு (DNA) பரிசோதனையில் அது மெலோடியின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில், தாய்க்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri