மத்திய கிழக்கில் கடும் பதற்றநிலை! அபுதாபியில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணைகள்
அபுதாபியில் கலீபா பொருளாதார மண்டலம் பகுதியினை தாக்க வந்த ஏவுகணை வான் பாதுகாப்பு சாதனங்களால் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கி வரும் நிலையில், ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
வளைகுடா நாடுகள் பாதிப்பு
இந்நிலையில், ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் 5 இந்தியர்கள் காயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
எனவே அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பெற வேண்டும் என கேட்டு கொண்டதுடன், பரவி வரும் வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை தவிர்க்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டமையினால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.