கட்டாரின் மீது தொடர் தாக்குதலில் ஈரான் - குறிவைக்கப்பட்ட முக்கிய தளம்
கட்டாரின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையமான ராஸ் லஃபான் நகரம் மீது ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக கட்டாரின் அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதால், அதன் விளைவாக ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்ட," என கட்டார் எனர்ஜி சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளது.
கட்டார் மீது ஐந்து ஏவுகணைகள்
ராஸ் லஃபானில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கட்டார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்றொரு தனி அறிவிப்பில், இன்று முழுவதும் ஈரானிலிருந்து கட்டார் மீது ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவற்றில் நான்கு இடைமறிக்கப்பட்டதாகவும், மற்றொன்று ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் விழுந்து தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், அந்தத் தீ விபத்து பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்சமயம் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மணிநேரங்களில் - மிகப்பெரிய தாக்குதல்! குறிவைக்கப்பட்டுள்ள 5 முக்கிய எரிசக்தி நிலையங்கள் - IRGC அதிரடி உத்தரவு
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan