இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு குறித்த தாக்குதல்களை நடத்தியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட், ஏவுகணை, துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இயக்கச்சியில் காத்திருந்த ஆச்சரியம்! (Video)
வான்வழி தாக்குதல்
இந்நிலையில் இஸ்ரேலின் எல்லையோர பகுதிகளான டொவிவ், கிர்யத் ஷமொனாவை குறிவைத்து லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த ஏவுகணை தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிகழ்வு போரை விரிவுபடுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |