பூஸ்டர் தடுப்பூசி பற்றி பிழையான தகவல்கள் வெளியிடப்படுகின்றன
பூஸ்டர் தடுப்பூசி பற்றி பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி டோஸ் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் மாத்திரைகளை ஏற்றிய போது ஏற்படாத பக்க விளைவுகள் எதுவும் பெரிதாக மூன்றாவது டோஸ் போடும் போது ஏற்பட்டதாக இதுவரையில் கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பூஸ்டர் டோஸ் பற்றி பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் அலையை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வதேயாகும் என பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்துளார்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
