ஊழியர் ஒருவரின் முறைகேடான செயல் : மடக்கிப்பிடித்த பொதுமக்கள்
யாழ்ப்பாணம் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் கழிவுநீரை ஊற்றி விட்டு செல்ல முயன்ற வவுசர் வண்டியொன்று அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றின் கழிவு நீரை அகற்றும் வவுசர் வண்டியே இவ்வாறு நேற்றையதினம் (18.11.2023) பிடிபட்டது.
வழமையாக இவ்வாறு கழிவுகளை ஊற்றி விட்டு செல்லும் வவுசர் வண்டியை அவதானித்த அப்பகுதி மக்கள் மறைந்திருந்து வவுசரில் வந்தவர்கள் கழிவு நீரை ஊற்றும் போது கையும் களவுமாக பிடித்து சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதிகளில் உயர்தரமாக காட்டி கொள்பவர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கீழ்த்தரமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
