எட்டு தடவை கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ஒன்பதாவது குழந்தை பிரசவிப்பு (Photos)
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார்.
குறித்த பிரசவம் இன்றைய தினம் (01.01.2024) இடம்பெற்றுள்ளது.
24 வயதான இந்த தாய் திருமணம் முடிந்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக 8 தடவை கருச்சிதைவு ஏற்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
தொடர் சிகிச்சை
அதன் பின்னர் இந்த தாயார் கர்ப்பத்திற்கு, முன்னரும் கர்ப்ப காலத்திலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று புதுவருட தினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார்.
மகப்பேற்று வைத்திய நிபுணர் சிவராஜா சிஜெதராவின் மருத்துவக் குழுவனரே இந்த தாய்க்கு சிகிச்சை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
