மிருசுவில் தமிழ் பொதுமக்கள் கொலை வழக்கு : கோட்டாபயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sivaa Mayuri
in பாதுகாப்புReport this article
ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகாமையால் அவருக்கு அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) மிருசுவில் 8 பொதுமக்களின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்கவுக்கு (Sunil Ratnayake), பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று (17) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுக்கள் விசாரணை
குறித்த வழக்கு விசாரணையின் போது கோட்டாபய ராஜபக்சவோ அல்லது அவரது சட்டத்தரணியோ, மனுவின் பிரதிவாதியான சுனில் ரத்நாயக்கவின் சட்டத்தரணியோ எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து வழக்கு செப்டம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின்படி இந்த மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் இராணுவ உறுப்பினரான சார்ஜன்ட் ஆர்.எம் சுனில் ரத்நாயக்க, 2000ஆம் ஆண்டு மிருசுவில் கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி கோட்டாபயவின் கருணையைப் பெற்று விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் தேசிய அதிகார சபையின் பெயரைக் குறிப்பிட்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து உட்பட பல மனுதாரர்கள் இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்த ஐந்து மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
ஐந்து நீதியரசர்கள்
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்குவது நியாயமற்றது என்றும் முறையற்ற உள்நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனவும் மனுதாரர்கள் தமது மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்
ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு 2020 மார்ச் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானம் தன்னிச்சையானது, இது பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்படவில்லை என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக 2000ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய சுனில் ரத்நாயக்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற ட்ரயல் அட்-பார் அமர்வு, 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதியன்று மரண தண்டனை விதித்தது.
இதனையடுத்து 2017 மே 20ஆம் திகதியன்று உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த சம்பவம் தொடர்பாக ரத்நாயக்கவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒருமனதாக உறுதி செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 14 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
