வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்
வவுனியா (Vavuniya), பூந்தோட்டம், சிறிநகர் பகுதியில் வீடு ஒன்று உடைந்து வீழ்ந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (19.07.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் கணவனும் மனைவியும் தங்கியிருந்த நிலையில், வீடு திடீர் என்று உடைந்து வீழ்ந்துள்ளது. குறிப்பாக வீட்டின் பின்பக்க சுவர் மற்றும் கூரைப்பகுதி என்பன முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளன.
கிராமமக்கள் கவலை
அனர்த்தம் இடம்பெற்ற போது கணவனும் மனைவியும் வீட்டிற்கு வெளியில் இருந்தமையால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா சிறிநகர் பகுதியில் 1996ஆம் ஆண்டு பொதுமக்கள் குடியேற்றப்பட்ட நிலையில் 50இற்கும் மேற்ப்பட்ட வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கின்றது.
தமக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குமாறு பல்வேறு தரப்புக்களிடமும் பலமுறை கோரிக்கை முன்வைத்துள்ள நிலையிலும் அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







