பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை : செய்திகளின் தொகுப்பு
இந்த வார இறுதியில் இருந்து எதிர்வரும் வார இறுதி வரை மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுமுறைகளை கருத்திற் கொண்டு சுற்றுலா பயணங்களில் ஈடுபடாமல் வீடுகளில் இருப்பது சிறந்ததென பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறையில் அதிகமானோர் சுற்றுலா பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். எனினும் தாங்கள் தனித்தனியாக சிந்தித்து பயணங்களை தவிர்ப்பதன் மூலம் மிகப்பெரிய ஆபத்துக்களை தவிர்க்க முடியும். தற்போது வரையிலும் சிறிய சிறிய கோவிட் கொத்தணிகள் உருவாகியுள்ளன.
சுகாதார பாதுகாப்புடன் மக்கள் செயற்படவில்லை என்றால் இந்த சுதந்திரம் தொடர்ந்தும் நீடிக்காது. இந்த வாரம் செல்ல எதிர்பார்க்கும் சுற்றுலா பயணங்களை மேலும் சில வாரங்கள் தாமதப்படுத்தி மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட் அவதானம் தொடர்ந்து காணப்படுகின்றமையினால் சுகாதார ஆலோசனைக்கமைய செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,