நிபா வைரஸ் பரிசோதனை குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு
அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட கலந்துரையாடல்
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்துடன், நிபா வைரஸ் தொடர்பாக இன்றைய தினம் (25.09.2023) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும், இன்று அமைச்சரவை கூட்டத்தின் போது அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri