எரிக் சொல்ஹெய்மிற்கும் சுற்றாடல் அமைச்சருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கும் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்ற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அமைச்சில்
இன்று (12) இச் சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பில் காலநிலை மாற்றம், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள், அதனை வராமல் தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமைப் பொருளாதாரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் பசுமைப் பொருளாதார முயற்சி மற்றும் சுற்றாடல் பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கையின் தொலைநோக்கு பார்வை குறித்தும் அமைச்சர் நசீர் அஹமட் இந்த சந்திப்பின் போது விளக்கியுள்ளார்.
சுற்றாடல் அமைச்சில், காலநிலை மாற்றம் குறித்த பல்துறை நிபுணர்கள் கொண்ட "மனிதவள" அலகு ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் காலநிலை மாற்றம் தொடர்பிலான சவால்களை முறியடிப்பது தொடர்பில் சர்வதேசத்தின் உதவிகளையும் ஒத்தாசைகளையும் பெறுவது குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினை

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சமாதான தூதுவராக நீண்ட காலம் செயற்பட்டு வந்த எரிக் சொல்ஹெய்மும், அமைச்சர் ஹாபிஸ் நசீரும் கடந்த காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், பின்னடைவுக்கான காரணங்கள், குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது சுற்றாடல் அமைச்சின் செயலாளர் Dr. அனில் ஜெசிங்க,
முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹிம் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri