பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் கூட்டம்
மட்டக்களப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி பங்குகொள்ளும் உயர்மட்ட கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் விமாப்படை உலங்குவானூர்தி மூலம் மட்டக்களப்புக்கு வருகை தந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் ஆரம்பத்தின் முன்பாக மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் கடும் சோதனைகளுக்கு மத்தியில் உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது செய்தி சேகரிப்புக்கு சென்ற ஊடகவியலாளர்களும் திரும்பியனுப்பப்பட்டிருந்தனர். மாவட்ட செயலகத்தில் கவச வாகனம் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கூட்டத்தில் என்ன விடயம் தொடர்பில் பேசப்பட்டன என்பது தொடர்பில் எந்த விடயங்களும் வெளிவரவில்லை.






பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam