பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்காவின் எச்சரிக்கை - இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வகையில் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் - 19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது.
அத்துடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இலங்கை தொடர்பில் நிலை 3 முதல் நிலை 4 வரையிலான பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கோவிட் - 19 நிலைமை கருதி வழங்கப்படுகிறது.
இதேவேளை பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan