விவசாய நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மில்கோ நிறுவனத்தையும், கால்நடை அபிவிருத்தி சபையினை ஒரே நிறுவனமாக செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உர விநியோக நிறுவனங்கள்
அத்துடன், உர விநியோகத்தை மேற்கொள்ளும் இரண்டு நிறுவனங்களான லங்கா உர நிறுவனம் மற்றும், கொமர்ஸல் உர நிறுவனம் என்பன ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாயம் மற்றும் பயிற்சி நிறுவனத்தையும் அனுராதபுரம் அறுவடை தொழில்நுட்ப நிறுவனம் ஆகியனவற்றை ஒரே நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
