அநுர அரசின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் தீர்வை வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது அமைச்சுக்களுக்கு சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொடுப்பனவுகள்
அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்களை மீளாய்வு செய்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பயிற்சி வழங்குதல், வீடுகள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சிறப்புரிமைகள்
அமைச்சர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் பரிந்துரையை கருத்தில் கொண்டு அமைச்சர்களின் சிறப்புரிமைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan